Monday, December 7, 2009

மீண்டும் சூரியனின் உதவும் கரங்கள்......

தரமான நிகழ்ச்சிகளை வழங்கி பெருமளவு ரசிகர்களை தம்வசப்படுத்திய நமது முதற்தர வானொலி சூரியன் எப்.எம் நடாத்தும் மற்றுமொரு சமூகப்பணியான சூரியனின் உதவும் கரங்கள் நிகழ்ச்சி மீண்டும்ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடம் போலவே இவ்வருடமும் வானத்து அமரன் யேசுபாலன் மண்ணுலகம் வந்த பொன்நாள், பிறந்த தினமாகிய நத்தார் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக, ஆதரவற்று சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற கள்ளம் கபடமற்ற அந்த செல்லச் சிறார்கள் உள்ளமெள்ளாம் மகிழ, உதவும் கரங்களால் அவர்களை அரவணைத்து அன்பளிப்புகள் வழங்கி,அவர்களுக்கு நம்பிக்கை தரும் நத்தாரை நன்நாளாய் ஒளிரச் செய்யவுள்ளோம். இந்த அன்புச் செல்வங்களுக்கு நீங்களும் உதவ விரும்பினால் உங்கள் உதவிகள் பற்றிய விபரங்களை தினமும் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை, சூரியன் எப்.எம் இன் தொலைபேசி இலக்கத்திற்கு, இலங்கை நேயர்கள் 011 4 799 775 என்ற இலக்கத்தின் வழியாகவும்,அதே போல் சர்வதேச நேயர்கள் 00 94 11 4 799 775 என்ற இலக்கத்தின் வழியாகவும் அழைத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
அந்த பிஞ்சு சிறார்களுக்கு தேவைப்டுகின்ற பொருட்கள் ஆவன..
பாடசாலைப் பொருட்களான:- அப்பியாசக் கொப்பிகள்,பென்சில்,பேனா,நிறப்பெட்டி போன்ற அடிப்படைப் பொருட்கள், புத்தகப்பை, பாதணிகள், குடிநீர் போத்தல் போன்றவைகள்.
விளையாட்டுப் பொருட்கள், புதிய ஆடைவகைகள், டொபி,பிஸ்கட்,சொக்லேட் போன்ற திண்பண்டப்பொருட்கள். இவ்வாரான பல சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை அன்போடு எதிர்பார்க்கிறோம். முந்திக் கொண்டு நீங்களும் உங்களால் இயன்ற உதவியினை (சிறியதோ,பெரியதோ), உதவிக்கரத்தினை நீட்டும் படி கேட்டுக் கொள்கிறோம். யேசுபாலன் மண்ணுலகத்தில் உதயமான தினத்தை உதவிக்கரம் நீட்டிய மனநிறைவுடன் கொண்டாடுங்கள்.

Thursday, October 15, 2009

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களை சூரியன் நேயர் குழாம் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெகுவிரைவில்....
புதிய பதிவுகளோடு புதிய மெருகுடன் இவ்வலைத்தளம் உங்களுக்காக வரக்காத்திருக்கிறது.

Wednesday, October 7, 2009

புதிய அலைவரிசையில் மேலும் தெளிவாக.....

 எட்டுத்திக்கும் இசையால் கைதுசெய்யும்  நமது முதல்தர வானொலி சூரியன் எப்.எம், தற்பொழுது உவா மற்றும் கிழக்கு மாகாணத்தில் எப்.எம் 103.4இல் முன்னரைவிட மேலும் தெளிவாக.... 
கொழும்பு மற்றும் தெற்கில் 103.2 MHZ
கண்டி  மற்றும் வடக்கு கிழக்கில் எப்.எம் 97.3  MHZ
யாழ்பாணம் எப்.எம் 93.0 MHZ
நாடு முழுவதும் தமிழகத்திலும் எப்.எம்  97.9 MHZ
உவா மற்றும் கிழக்கில் எப்.எம்  103.4 MHZ 
கேட்கத்தவராதிர்கள்....

Wednesday, September 30, 2009

இன்றைய தினம் இரவு 10 மணிக்கு...

இன்றைய தினம் நடிகர்திலகம் செவாலியே சிவாஜிகணேசனின் பிறந்ததினத்தை நினைவு கூர்ந்து சிறப்பு நேற்றைய காற்று உங்கள் முதல்தர வானொலி சூரியனில் கேட்கத்தவராதிர்கள். இரவு 10 மணிக்கு....

Friday, July 24, 2009

வானலை முதல்வன் சூரியன் பண்பலைக்கு 11வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

குறிஞ்சி ஆண்டிலே காலடி எடுத்து வைக்கும்என் இனிய சூரியனே.. வானலையில் மணம் வீசும் என் இனிய காதலனே..
வட்டமான மாடியிலே குடி கொண்ட வானலை வல்லவனே..
சோர்வுற்ற வேளையிலே சாதனைகள் நீ தந்தாய்..
தனிமை தனை போக்கிடவே தோளாக தோள் கொடுத்தாய்..
வானலையை தவழவிட நாட்டிலே பலர் உண்டு.
உனை போல் சாதனை பல புரிய பாரிலே யார் உண்டு..
ஓங்க வேண்டும் உன் புகழ் பார் எங்கும்திகழ வேண்டும் நீயே முதல்வனாக..
-M.Buveraj

12 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் வானலை முதல்வன் சூரியன்FM க்கு 11வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்


12 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் வானலை முதல்வன் சூரியன் பண்பலைக்கு 11வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றைக்கு 11 வருடங்களுக்கு முன் வானொலி வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி தனியார் வானொலிகளில் தனக்கென ஒரு இடத்தை பதித்த நமது முதல் தர வானொலி சூரியன் பண்பலை தநாப்தத்தை வெற்றிகரமாக 12 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறான். தரத்தில் முதல்வனாய் வானொலிகளில் வல்லரசனாய் தனித்துவமான நிகழ்ச்சிகளை படைத்தனாக இன்றும் ஏனைய வானொலிகளின் நிகழ்ச்சிகளுக்கு வித்திட்டவனாக பல அறிவிப்பாளர்களை உருவாக்கியவனாக தொடர்ந்தும் அசைக்க முடியாத அலைவரிசையாக இருக்கின்றான்.
இந்த 11 வருட கரடுமுரடான வரலாற்றில் சோதனைகளை சாதனைகளாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளான். எப்பொழுதும் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் சந்தோஷத்தில் மட்டுமல்லாமல், துக்கத்திலும் பங்கெடுத்து ஒரு தாயாக, ஒரு குருவாக, ஒரு நண்பனாக இருந்து தோளோடு தோள் கொடுத்து நிற்கின்றான். இதுவே சூரியனின் சாதனைகளின் இரகசியமாகும். வானலையில் நல்ல தரமான நிகழ்ச்சிகளைக் கொடுத்து எட்டுத்திக்கும் இசையால் தன் வசப்படுத்தி மக்கள் நெஞ்சங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளான். இதனாலேயே அவனைச் சுற்றி மிகப்பெரிய அன்பால் சேர்ந்த நேயர் வட்டம் என்றும், எங்கும், எப்பொழுதும் உண்டு. இந்த தசாப்தம் மடடுமல்ல இன்னும் பல ஆயிரம் தசாப்தங்களைக் கடந்து தொடர வேண்டும் உன் பணி என சூரியன் நேயர்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Sunday, April 12, 2009

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும்...
சாந்தியும் சமாதானமும் மிக்க..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்றும் நன்றி மறவா..

சூரியன் நேயர்கள்.

Tuesday, March 24, 2009

கொப்பி அடித்தாலும் சூரியன் போல வருமா...

1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூரியன்FM நேயர்கள் மத்தியில் மிகப்பிரபலம் பெற்ற தனியார் வானொலிச் சேவையாகத் திகழ்கிறது.

இலங்கையின் தமிழ் வானொலி உலகில் கடந்த ஒரு தசாப்தமாக அசைக்க முடியாத அலைவரிசையாக வலம் வரும் உங்கள் முதல் தர வானொலி சூரியன் FM.  உங்கள் வீட்டு வரவேற்பறைக்குள் உரிமையோடு உள் நுழைந்து உறவாடிய உங்கள் முதல்வன் 11வது ஆண்டில் கால் பதிக்கின்றான்.
 
கொப்பி அடித்தாலும் சூரியன் போல வருமா...

 

வானத்து சூரியனே வாடா... தமிழ வாழ வைக்கிற சூரியன் இவன்தான்டா...

 

சூரியனின் இணையத்தள முகவரி - http://www.sooriyanradio.com