Friday, July 22, 2011

14 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் சூரியனின் சாதனைப்பயணம்..

உலகத்துக்கே ஒளி தரும் சூரியன் போல் தமிழ் வானொலிகளுக்கே ஒலி தரும் ஆதாரமாய் உருவானது இந்த வானொலி சூரியன். இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன், 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை தமிழ் வானொலியில் மாபெரும் புரட்சியாக பண்பலையில் உதயமாகியது இந்த சூரியன். ஆரம்பத்தில் ஒரு கிழமை பரீட்சார்த்தமாக புதிய பாடல்களுடன் பெயரே குறிப்பிடாமல் எப்.எம் 103.2 இல் ஒலிபரப்பாகியது.

தலைநகராம் கொழும்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு வாரத்தின் பின், ஜூலை மாதம் 25 ஆம் திகதி, தக தகவென மின்னும் வானத்து தங்கச்சூரியன் போல் தமிழ் வானொலியிலும் வானொலிச் சூரியன் உத்தியோகபூர்வமாக உதயமானது. அதுவும் 24 மணிநேர ஒலிபரப்பாக, அஸ்தமனம் இல்லாத சூரியனாய் ஒலி தந்தது.

அன்று முதல் எங்கும் எல்லோர் மத்தியிலும் சூரியன் பேச்சு. சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் மகிழ்விக்கும் முகமாக நிகழ்ச்சிகளைப் படைத்தது சூரியன். மணியடித்திட இசை ஒலித்திட இனித்திடும் இன்பராகங்கள். எல்லோருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாய் அமைந்தது. அத்தோடு இரவின் தாலாட்டாய் நேற்றைய காற்றும் நேயர்களின் நெஞ்சங்களை வருடியது. அத்தனை ஆரம்ப கால அறிவிப்பாளர்களும் அட்டகாசமாய் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்தனர். நேரடியாக தொலைபேசியில் நேயர்களை இணைத்துக்கொண்டும், சூரியன் சுற்றுலாக்களை நடாத்தியும் நேயர்களின் நெஞ்சங்களில் அசையா இடத்தைப் பிடித்துக் கொண்டான் இந்த சூரியன்.


வெகு விரைவிலே நாடு முழுவதும் பண்பலை ஒலிபரப்பு விஸ்தரிக்கப்பட்டது. FM 97.3, FM 97.9, FM 93 என்று நாடு முழுவதும் மட்டுமன்றி, கடல் கடந்து தமிழ் நாட்டின் பெரும்பாலான கரையோரப்பிரதேசங்களையும் தன் பால் கவர்ந்து கொண்டது இந்த சூரியன். அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் மட்டுமன்றி உலகில் எங்கெல்லாம் தமிழ் நெஞ்சங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சூரியன் மயமானது. தரமான நிகழ்ச்சிகளைப் படைத்து, பெருமளவான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வானொலி என்று சொன்னால் அது இந்த வானொலி முதல்வன் சூரியனையே சாரும். பல புதிய நிகழ்ச்சிகளை படைத்தது மட்டுமன்றி, பல அறிவிப்பாளர்களையும் உருவாக்கிய பெருமை சூரியனையே சாரும். அந்த நிகழ்ச்சிகளும், அறிவிப்பாளர்கலுமே புதிய வானொலிகளும் உருவாகக் காரணகர்த்தாவாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

இன்று ஒரு தசாப்தத்தைக் கடந்து தரணியெங்கும் தமிழ் வானொலிகளின் வல்லரசனாய் தனக்கென தனி இடம் பிடித்து, நிமிர்ந்த நடையில் 14 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றான். எத்தனையோ தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்றான். முதன் முதலில் வானொலிக்காய் ரசிகர் மன்றம் அமையப் பெற்றது என்றால் அது அது சூரியன் FM மாத்திரமே..!!

இன்று பல மாவட்டங்களிலும் ரசிகர் மன்றங்கள் மூலம் பல நற்பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர் சூரியன் அபிமானிகள். இலங்கையில் மாத்திரமல்லாது உலகில் பிரான்ஸ், கனடா, லண்டன் என்று உலகின் பல பாகங்களிலும் ரசிகர் மன்றங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி சூரியன் வானொலியும், இயற்கை அனர்த்தங்களாலும், ஏனைய இன்னல்களுக்கு மக்கள் முகம்கொடுக்கின்ற போதும், முந்திக்கொண்டு வந்து உதவிக்கரங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீட்ட ஒருபோதும் பின்னின்றதில்லை. என்றும் நேயர்களின் தேவை என்ன என்று மட்டுமே சிந்தித்து, அவர்களின் தேவைக்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளைப் படைப்பதில் சூரியனுக்கு நிகர் சூரியனே..!


அத்துடன் சூரியன் நிலையக்குறியிசை என்றால் ஆரம்பக்காலம் தொட்டு தென்னிந்திய பாடல்களுக்கு நிகராக பேசப்படுகின்றது. காரணம் நம் நாட்டுக் கலைஞர்களை வைத்து, தரமான படைப்புக்களை வழங்கியவன் சூரியனே..! அத்துடன் இலைமறைக் காயாக இருந்த பல கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியவன் இவனே..!

தரமான, நடுநிலையான நாட் திசைச் செய்திகளை உடனுக்குடன் முந்திக்கொண்டு தருவதும் இவனே. இவ்வாறு வானொலி உலகில் புதிய சரித்திரம் படைத்து எல்லா வானொலிகளுக்கும் முன்னுதாரணமாய் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.


இன்று உலகெங்கும் இணையத்தினூடாகவும் 24 மணிநேரமும் துல்லியமான ஒலித்தெளிவுடன் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. http://sooriyanfm.lk/ என்ற உத்தியோகபூர்வ பக்கத்திற்கு விஜயம் செய்தீர்கள் என்றால், நிகழ்ச்சிகளின் பதிவேற்றப்பட்ட தொகுப்புக்களையும், நிலையக்குறியிசைகள், சூரியன் வானொலியின் படைப்புக்களையும் கேட்டும், பதிவிறக்கவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சூரியனின் மெகா ப்ளாஸ்ட் போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும், அறிவிப்பாளர்களின் குரல் தொகுப்புக்களையும், நேரடியாக அவர்களுடன் அரட்டை(chat) செய்யும் வாய்ப்பும், பிடித்த பாடல்களை விரும்பிக் கேட்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள சூரியன்செய்திகள் பக்கத்திற்கு விஜயம் செய்யலாம். அத்தோடு நான்கு வேளை செய்திகளையும் நீங்கள், நேரடியாக பதிவு செய்து தரவேற்றுவதன் காரணமாக நீங்கள் தவற விட்ட செய்தியறிக்கைகளையும் கேட்கக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு பல தடைகளையும் தகர்த்து, சாதனைகளையும் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளோடும், புதிய மெருகுடனும், புதுப்பொலிவுடனும் இன்னும் பல புதுமைகளை படைக்க இருக்கின்றான். இதுவே வானொலி வல்லரசன், முதற்தர வானொலி சூரியனின் சாதனைப் பயணம்..!! இது ஆரம்பம். இனியும் தொடரும்..!!

13 வது பிறந்த நாளைக் கொண்டாடும் No. 1 வானொலி சூரியனுக்கு, சூரியன் நேயர்கள் குழாமின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!!! இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரட்டும் உன் சேவை...!!

Tuesday, June 14, 2011

மலேஷியா வாசுதேவனின் நினைவுப் பயணம்..


இன்று இரவு 9 மணிக்கு உங்கள் முதல்வன் சூரியன் அலைகளில் மறைந்த பிண்ணனிப் பாடகரும், நடிகருமாகிய மலேஷியா வாசுதேவனின் மனது மறக்காத பாடல்களுடன் ஒரு நினைவுப் பயணம். நேற்றைய காற்று நிகழ்ச்சியில்.... கேட்கத்தவறாதீர்கள்....!!
கொழும்பு மற்றும் தெற்கில் 103.2 MHZ
கண்டி மற்றும் வடக்கு கிழக்கில் எப்.எம் 97.3 MHZ
ஊவா மற்றும் தென்கிழக்கில் 103.4 MHZ
யாழ்பாணம் எப்.எம் 93.0 MHZ
நாடு முழுவதும் தமிழகத்திலும் எப்.எம் 97.9 MHZ

இணையத்தினூடாக கேட்க http://www.sooriyanfm.lk/sooriyan_high/sooriyanfmonair.html